ALAM SEKITAR & CUACAANTARABANGSAECONOMY

பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கியது மேகி சூறாவளி- 56 பேர் பலி, பலரைக் காணவில்லை

மணிலா, ஏப் 13- பிலிப்பைன்ஸ் நாட்டை மேகி சூறாவளி  தாக்கியது. இந்த சூறாவளிக்கு இதுவரை 56 பேர் பலியாகியுள்ளதோடு பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக கடலோர மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிப் பொருள்களையும் தங்கும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதற்கு அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்த இயற்கை  பேரிடர் காரணமாக சுமார் 42,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதோடு 200 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வெப்ப மண்டல சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டை இவ்வாண்டில் தாக்குவது இது முதன் முறையாகும். தற்போது இந்த சூறவளியின் தாக்கம் குறைந்து விட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறை கூறியது.

அடிக்கடி நிலச்சரிவுகள் நிகழக்கூடிய கிழக்கு பிலிப்பைன்சின் பேய்பேய் மலைப் பகுதி நகரில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில்தான் அதிக உயிருட்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு நடவடிக்கையின் போது அடர்த்தியான மண் சரிவிலிருந்து பெரியவர்கள் மற்றும் சிறார்களின் உடல்களை மீட்பு பணியாளர்கள் மீட்பதை சித்தரிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்டொன்றுக்கு குறைந்தது 20 வெப்ப மண்டல சூறாவளிகள் தாக்கும். கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் நிலை ரேய் சூறாவளி மத்திய மாநிலத்தைக் தாக்கியதில் 405 பேர் உயிர்ச் 1,400 பேர் காயமுற்றனர்.


Pengarang :