ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பயன்படுத்தாத பொருள்களை அப்புறப்படுத்தும் சேவை- எம்.பி.எஸ்.ஜே. வழங்குகிறது

ஷா ஆலம், ஏப் 14 –  நோன்புப் பெருநாளை முன்னிட்டு வீடுகளிலுள்ள பயன்படுத்தாத பொருள்களை இலவசமாக அப்புறப்படுத்தும் சேவையை  சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வழங்குகிறது.

இச்சேவை ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று
மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர் அஸ்ஃபரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.

இந்தச் சேவையை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வழங்கும் என்று அவர் தெரிவித்ததாக சினார் ஹரியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சேவை வரிசை வீட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இச்சேவையைப் பெற விரும்புவோர்  ஏப்ரல் 18 முதல்  25 வரை 03-80814437 என்ற எண்களில்  அல்லது 011-35574437 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அந்நிறுவனத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றார் அவர்.

மெத்தைகள், பழைய தளவாடங்கள், மின்சாதனங்கள் மற்றும் இதர பொருட்கள் இச்சேவை உள்ளடக்கியிருக்கும். புதுப்பித்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், மறுசுழற்சி பொருட்கள்  ஆகியவை சேவையில் சேர்க்கப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடவிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அஸ்ஃபரிசால் மேலும் கூறினார்.


Pengarang :