ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

எரியும் வீட்டிலிருந்து தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிர் தப்பினர்

ஷா ஆலம், ஏப்ரல் 14: செத்தியூவின் கம்போங் அலோர் செர்டாங்கில் உள்ள அவர்களது வீடு நேற்று மதியம் தீப்பிடித்ததில், கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

நான்கு மாதக் கர்ப்பிணியான நூர் ஹஸ்யா அஃபிகா அஸ்லி, 25 சம்பவத்தின் போது, ​​அவரும் அவரது குழந்தைகளும் நோன்பு திறக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் வீடு தீபற்றி எரிவதை உணர்ந்ததாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

26 வயதான தனது கணவர் முகமது பத்ருல் அமீன் முகமது ரம்லி, சம்பவத்தின் போது வீட்டில் இல்லை, ஏனெனில் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப் படும் அவர் பயன்படுத்திய தளபாடங்களை வாங்க ஏப்ரல் 11ல் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

“நேற்று மாலைக் கர்ப்பகால ஒவ்வாமை காரணமாகத் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக எட்டு வயது மூத்த குழந்தை வீட்டின் முன் கதவில் புகை மற்றும் தீப் பற்றியிருப்பதைக் கவனித்தார்.

“இரண்டாவது ஐந்து வயது சிறுவன், தூங்கிக் கொண்டிருந்த தனது இரண்டு வயது சகோதரியை வீட்டை விட்டு வெளியே வரக் கையைப் பிடித்து இழுக்க. தக்க நேரத்தில் குடும்பம் தப்பித்ததாக , கடந்த ஆண்டு முதல் வாடகைக்கு இருந்துவரும் அவர் கூறினார்.

கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை வெற்றிகரமாக வேறொரு இடத்திற்கு மாற்றியதாகவும், ஆனால் துணிகள் உள்ளிட்ட மற்ற அத்தியாவசியப் பொருட்கள் காப்பாற்ற முடியாதவள் எரிந்து போனதாகவும் கூறினார்.

தற்போது இந்தப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தற்காலிகமாகக் குழந்தைகளுடன் வசிக்கின்றனர்.


Pengarang :