ECONOMYPBTSELANGOR

நடப்பு விவகாரங்கள் தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிலாங்கூர் கினி நேர்காணல்

ஷா ஆலம், ஏப் 19- சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் சேவைகள் மற்றும் நடப்பு நிலவரங்கள் குறித்த பேட்டியை சிலாங்கூர் கினி இணை பத்திரிகை ஒவ்வொரு வாரம் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வெளியிட்டு வருகிறது. இந்த பேட்டியை பொது மக்கள்  selangorkini.my எனும் அகப்பக்கம் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் பிரசுரமாகி வரும் இந்த நேர்காணலில் மாநில அரசின் உதவித் திட்டங்கள், மாநில சட்டமன்றத்தின் நடவடிக்கைகள், நடப்பு விவகாரங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின்  பின்னணி குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.

இம்மாதம் 18 ஆம் தேதி வரை ஏழு சட்டமன்ற உறுப்பினர்களின் பேட்டி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சஹாரி சுங்கிப் (உலு கிள்ளான்), நஜ்வான் ஹலிமி ( கோத்தா அங்கிரிக்), மிஷல் இங் மேய் ஸீ (சுபாங் ஜெயா), டாக்டர் ஜி.குணராஜ் (செந்தோசா), மஸ்வான் ஜோஹார் (சுங்கை ராமால்), வோங் சியு கீ  (பலாக்கோங்), ஜூவாய்ரியா ஜூல்ப்ளி ( புக்கிட் மெலாவத்தி) ஆகியோரே இதுவரை பேட்டி காணப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களாவர்.

சிலாங்கூரிலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகளை பக்கத்தான் ஹராப்பான் தன் வசம் வைத்துள்ளது. கெஅடிலான் கட்சியிடம் மிக அதிகமாக அதாவது 19 இடங்கள் உள்ள வேளையில் ஜசெக 15 இடங்களையும் அமானா 6 இடங்களையும் வைத்துள்ளன.


Pengarang :