ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இ.பி.எஃப். பணம் RM10,000 ஹரி ராயா பெருநாளுக்கு முன் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும், அமைச்சர் உறுதி

ஷா ஆலம், ஏப்ரல் 20: ஊழியர் சேம நிதியின் (இ.பி.எஃப்.) சிறப்பு திரும்பப் பெறுதல்  கட்டம்  கட்டங்களாக மேற்கொள்ளப்படும், ஹரி ராயா பெருநாளுக்கு முன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று நிதியமைச்சர் கூறினார்.

53 லட்சம் தனிநபர்களை உள்ளடக்கிய அதிக விண்ணப்பங்கள் காரணமாகக் குறுகிய காலத்தில் RM401 கோடி விநியோகம் செய்வது கடினமாக இருந்தது என்று டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார்.

“உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப் படவில்லை மற்றும் விநியோகம் செய்யப் படவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இ.பி.எஃப். ஹரி ராயா பெருநாளுக்கு முன்பாக அதை முடிக்க உறுதியளித்துள்ளது,” என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

நேற்றைய தினம் முதல் விநியோகிக்கப்படும் பெறுநர்களின் வங்கிக் கணக்குகளில் இ.பி.எஃப். இன் சிறப்புப் பணம் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து பல கேள்விகளை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப் பட்டது.

அதிகபட்சமாக RM10,000 மற்றும் குறைந்தபட்சம் RM50 இ.பி.எஃப்.-க்கான சிறப்பு திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஒரு மாதத்திற்கு 55 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், உறுப்பினர்கள் கணக்கு 1 இல் உள்ள சேமிப்பை அணுகுவதற்கு முன், கணக்கு 2 இல் உள்ள சேமிப்பு நிலுவைத் தொகையை முதலில் திரும்பப் பெற வேண்டும்.

 


Pengarang :