ECONOMYMEDIA STATEMENT

448 ரோஹிங்கியா கைதிகள் மூன்று மாநில தடுப்புக் காவல் முகாம்களுக்கு மாற்றம்

அலோர்ஸ்டார், ஏப் 21- சுங்கை பாக்காப் தடுப்புக் காவல் முகாமிலுள்ள 448 ரோஹிங்கியா கைதிகள் சிலாங்கூர், பேராக் மற்றும் மலாக்காவிலுள்ள நான்கு தடுப்புக் காவல் மையங்களுக்கு நேற்று மாற்றப்பட்டனர்.

அவர்களில் 148 கைதிகள் சிலாங்கூரிலுள்ள செமினி தடுப்புக் காவல் மையத்திற்கும் 104 பேர் மலாக்கா, மாச்சாப் உம்போ தடுப்புக் காவல் மையத்திற்கும் 110 பேர் பேராக் மாநிலத்தின் லக்காப் தடுப்புக் காவல் மையத்திற்கும் மேலும் 100 பேர் புக்கிட் ஜாலில் மையத்திற்கும் அனுப்பப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் வான் ஹசான் வான் அகமது கூறினார்.

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் 272 ஆண்கள், 83 பெண்கள், 36 சிறார்கள் மற்றும் 57 சிறுமிகளும் அடங்குவர் எனக்கூறிய அவர்,  அவர்களை இடமாற்றம் செய்யும் பணி நேற்று நள்ளிரவு 12.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டதாகச் சொன்னார்.

இன்னும் 99 ஆண்கள், 21 பெண்கள் மற்றும் 5 சிறார்களை உள்ளடக்கிய 130 பேர் இன்னும் சுங்கை பாக்காப் தடுப்புக் காவல் மையத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தப்பியோடிய கைதிகள் அனைவரையும் பிடிக்கும் வரை தேடுதல் நடவடிக்கையை நாங்கள் தொடர்வோம். இதுவரை 398 பேர் மறுபடியும் பிடிக்கப்பட்டனர். அவர்களில் விபத்தில் இறந்த அறுவரும் அடங்குவர் என்றார் அவர்.


Pengarang :