ANTARABANGSAECONOMYSUKANKINI

ஹனோய் சீ போட்டி- 36 தங்கப் பதக்கங்களுக்கு மலேசியா இலக்கு

 கோலாலம்பூர், ஏப் 28 – வரும் மே மாதம் 12  தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஹனோய் சீ விளையாட்டுப் போட்டியில் 36 தங்கம், 35 வெள்ளி மற்றும் 75 வெண்கலப் பதக்கங்களை வெல்ல மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 584 தேசிய விளையாட்டு வீரர்களின் தற்போதைய செயல்திறன் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனான கலந்துரையாடலின் அடிப்படையில்  இந்த 146 பதக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு கூறினார்.

ஹனோய்  போட்டியில் நீச்சல் மற்றும் தடகள விளையாட்டுகள்  தேசிய அணிக்கு தங்கப் பதக்கம் குவிக்கும் களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொரு விளையாட்டிலும் ஐந்து தங்கப் பதக்கங்களுக்கு மேல் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வூஸு,  தேகவாண்டோ, பெஞ்சாக் சீலாட், உடற்கட்டழகர் மற்றும் பல விளையாட்டுகள் மூலமாகவும் தங்கத்தை வெல்ல முடியும். 58 சதவீதத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் தங்களின் முதல் சீ விளையாட்டுப் போட்டிகளில் இம்முறை பங்கேற்க உள்ளனர் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

பதக்கங்களுக்கு குறி வைப்பதற்கு முன்னர் அவர்கள் அனைத்துலக நிலையிலான விளையாட்டுகளுக்கு  தங்களை  தயார்படுத்திக் கொள்ள வேண்டும்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு என நமக்கு நிறைய இலக்கு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்திற்காக காத்திருக்கிறோம், என்று அவர் மேலும் கூறினார்.

 


Pengarang :