ECONOMYMEDIA STATEMENTNATIONAL

குறைந்தபட்ச ஊதியம் , வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இருக்க வேண்டும் – அன்வார்

ஷா ஆலாம், மே 1: வாழ்க்கைச் செலவுகளை நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால், குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பில் அர்த்தமில்லை என்று டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிம் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர், தற்போது உள்ள அமைப்பு  செல்வந்தர்களின்  செல்வத்தை மட்டுமே அதிகரிக்கிறது, தொழிலாளர்களின் தலைவிதி மற்றும் உரிமைகளுடன் சமநிலை படுத்த படக் கூடிய நிலையில் இல்லை என்றார்.

“வாழ்க்கை செலவினங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால் , அதை நிவர்த்தி செய்வதற்கான விரிவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எதுவும் இன்றி ஊதிய உயர்வு என்பது அர்த்தமற்றதாகிவிடும் என்றார்.

அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பு எதையும்  சாதிக்காது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். “தற்போதுள்ள அமைப்பு முறை வளமுள்ளவரை வளர்ப்பதாகவும், தொழிலாளர்களைச்  சுரண்டுவதாகவும் உள்ளது அதனால்  நீதி நிலை நாட்டப்படாது” என்று அவர் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பங்கை உறுதிப்படுத்துவதற்கு மாற்றங்களைச் செயல்படுத்தவும் தொழிற்சங்கங்களை வலுப்படுத்தவும் தொழிலாளர்கள் அரசாங்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று  அன்வார் விரும்புகிறார்.

இன்று 2022ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆற்றிய சிறப்பு உரையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அயராத அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் குறைந்த பட்ச சம்பளமான RM1,500 ஒரு பரிசாகும் என்றார்.

மே 1 முதல் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய விகிதமான RM1,500 ஐ மார்ச் 19 அன்று இஸ்மாயில் சப்ரி அறிவித்தார், தொடக்கத்தில் இது பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களை (GLCs) உள்ளடக்கியதாக மட்டுமே உள்ளது.


Pengarang :