ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், மே 4- இரண்டு நீர் சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் ஐந்து மாவட்டங்களிலுள்ள 472 இடங்களில் ஏற்பட்ட அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை இன்று காலை 8.00 மணியளவில் சீரடைந்தது.

நீர் விநியோகத் தடையின் போது பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பும் நல்கிய  பயனீட்டாளர்களுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

ஜெண்டேலா ஹிலிர் நீர் அழுத்த மையத்தில் நேற்று நீரில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி மற்றும் சுங்கை தம்போய் நீர் சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில்  டன் எனப்படும் நீர் மணச் சோதனை அளவு சுழியம் அளவைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அவ்விரு சுத்திகரிப்பு மையங்களிலும் சுத்திகரிப்புப் பணி நேற்று மாலை 3.30 மீண்டும் தொடங்கியதோடு நீர் விநியோகமும் நேற்றிரவு முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

நீர் விநியோகத் தடை காரணமாக சிப்பாங், பெட்டாலிங், உலு லங்காட், கோல லங்காட், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 472 இடங்கள் பாதிக்கப்பட்டன.

கடந்த வாரத்தில் ஒரே இடத்தில் நிகழ்ந்த மூன்றாவது நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவம் இதுவாகும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ
ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

Pengarang :