ECONOMYSELANGOR

சிலாங்கூரில் மதிப்பீட்டு வரியில் அதிகரிப்பு இல்லை – எம்பி

ஷா ஆலாம், மே 5: மாநிலத்தில் மதிப்பீட்டு வரி உயர்த்தப்படவில்லை என்று டத்தோ மந்திரி புசார் வலியுறுத்தினார்.

இந்த நேரத்தில் மாநில அரசின்  மிக முக்கிய நோக்கம் பொருளாதாரத்தை மீட்சி பெற வைப்பது.  அரசின் முன்னுரிமை மக்களின்  பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் உயர்த்துவதும் ஆகும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர் பேஸ்புக் பதிவு  மூலம் தெரிவித்தார்.

ஏப்ரல் 28 அன்று, ஊராட்சி மன்றங்கள், பொதுப் போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், தொற்று நோய்க்கு பிந்தைய காலத்தில், மக்களுக்கு சுமையாக இருக்கும் மதிப்பீட்டு வரியில் எந்த ஒரு உயர்வையும் மாநில அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

காஜாங் முனிசிபல் கவுன்சில் (MPKj) செய்த புதிய மதிப்பை அமல்படுத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை என்று இங் ஸீ ஹான் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், MPKj இன் தலைவர் காஜாங் முனிசிபல் கவுன்சில் 2023 இல் மதிப்பீட்டு வரி விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

நஜ்முடின் ஜெமைன், மதிப்பீட்டு வரி உயர்த்துவதற்கான உத்தேச விகிதம் RM20க்கு மேல் இருக்காது என்றும் ஆனால் புதுப்பிக்கப்பட்ட வீட்டைக்  கொண்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு அது பொருந்தாது என்றார்.


Pengarang :