ECONOMYNATIONAL

விமானப் பயணிகள் எண்ணிக்கை மார்ச் மாதம் உயர்வு கண்டது

கோலாலம்பூர், மே 5- நாட்டில் வான் போக்குவரத்து தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. கடந்த 2020 மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை 76.0 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

ஆசியாவுக்கான உள்நாட்டு பயணச் சந்தையில் உக்ரேன் நெருக்கடி குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் ஒமிக்ரோன் நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாக உள்ளதாக ஐயாட்டா எனப்படும் அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம் கூறியது.

கடந்த பிப்ரவரி மாதத்திற்கான வருடாந்திர தேவை 115.9 விழுக்காடாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான வான் போக்குவரத்து குறைவாக இருந்தது. எனினும், கடந்த 2019 ஆம்  ஆண்டு பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய அளவைக் காட்டிலும் கடந்த மார்ச் மாதத்திற்கான அளவு 41 விழுக்காடாக பதிவானது என்று 2022 மார்ச் மாதத்திற்கான பயணிகள் தரவு தொடர்பான அறிக்கையில் அது தெரிவித்தது.

உள்நாட்டுச் பயணச் சேவையும் கடந்த மார்ச் மாதம் 11.7 விழுக்காடு உயர்வு கண்டது. அனைத்துலக சேவையை பொறுத்த வரை கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத்தைக் காட்டிலும் இவ்வாண்டு மார்ச் மாதம் 285.3 விழுக்காடு அதிகரிப்பைப் பதிவு செய்தது என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.


Pengarang :