ANTARABANGSAECONOMYSUKANKINI

சீ போட்டி- தாய்லாந்தை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் மலேசிய அணி

நாம் டின், மே 6- மலேசிய ஆண்கள் கால்பந்து அணி 31வது சீ போட்டியின் தொடக்க ஆட்டத்தில்  தாய்லாந்து குழுவை நாளை இரவு எதிர்கொள்கிறது. இந்த பி பிரிவின் முதல் ஆட்டத்தில் உபசரணை நாடான தாய்லாந்தை அதன் சொந்த அரங்கில் மிகுந்த நம்பிக்கையுடன் தாங்கள் சந்திக்கவுள்ளது.

பலம் பொருந்திய அணிகளில் ஒன்று என்ற முறையில் தாய்லாந்தை தாங்கள் மதிக்கும் அதேவேளையில் தங்களுக்குத் தேவையான முதல் மூன்று புள்ளிகளைப் பெறுவதற்கு சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் தங்களுக்கு இந்த இடையூறும் இருக்காது என்று 23 வயதுக்கும் கீழ்ப்பட்டோருக்கான கால்பந்து குழுவின் தலைமை பயிற்றுநர் பிராட் மெலோனி கூறினார்.

தாய்லாந்து குழுவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். வெற்றியாளர் பட்டியலில் அக்குழுவும் ஒன்றாக விளங்குவதோடு இப்போட்டியில் பல முறை வாகையும் சூடியுள்ளது.

இருந்த போதிலும் எனது அணியினர் அந்த குழுவைக் கண்டு அச்சமடையவில்லை. எதிரி யார் என்று சிறிதும் கவலைப்படாமல் நேர்முறையான மனதுடன் போட்டியை எதிர்கொள்வோம். ஆட்ட முடிவில் சாதகமான முடிவைப் பெற முடியும் என நம்புகிறோம் என அவர்  தெரிவித்தார்.

இவ்விரு குழுக்களும் ஆக கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் மங்கோலியாவில் நடைபெற்ற 23 வயதுக்கும் கீழ்ப்பட்டோருக்கான ஆசிய கிண்ணப் போட்டியில் மோதின. அப்போட்டியில் இரு குழுக்களும் கோல் ஏதுமின்றி சம நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டன.

புதிய மற்றும் பழைய ஆட்டக்காரர்களைக் கொண்ட இந்த 20 பேர் கொண்ட அணியின் ஈடுபாடும் ஆட்டத்திறனும் தமக்கு நம்பிக்கையை தருவதாக அவர் பிராட் தெரிவித்தார்.


Pengarang :