ECONOMYMEDIA STATEMENT

நீரிழிவு சிகிச்சைக்கு சுகாதார அமைச்சகம் மாற்று தயாரிப்புகளை பரிந்துரைக்கவில்லை

கோலாலம்பூர், மே 7: நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை மாற்றக்கூடிய எந்த ஒரு தயாரிப்பு அல்லது உணவை சுகாதார அமைச்சகம் (MOH) பரிந்துரைக்கவில்லை.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினின் இரத்த சர்க்கரை இயல்பு நிலைக்குத் திரும்பும் ‘ என்ற தலைப்பில், மாற்றியமைக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை குழப்ப முயற்சிக்கும் Ainalienshop-TW பேஸ்புக் பக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று பேஸ்புக் வழியாக சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“போலி அறிக்கைகளால் எளிதில் ஏமாந்து பாதிக்கப்பட வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

“அமைச்சகம் மீண்டும் ஒருமுறை தொழில் முனைவோர் அல்லது தயாரிப்பு உரிமையாளர்களிடம் அதிக பொறுப்புடன் இருக்குமாறு மற்றும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி பொதுமக்களை குழப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறது.

இதற்கிடையில், சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று இரவு தனது ட்விட்டர் மூலம் இந்த விஷயம் வணிக நலன்களுக்காக பொறுப்பற்ற நபர்களால் பரப்பப்படும் மற்றொரு போலி செய்தி என்று கூறினார்.


Pengarang :