ANTARABANGSAECONOMYSUKANKINI

தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டி- காலிறுதியாட்டத்தில் மலேசியா-இந்தியா மோதல்

பாங்காக், மே 12- தோமஸ் கிண்ண பூப்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மலேசியா இந்தியாவைச் சந்திக்கவுள்ளது. ‘டி‘ பிரிவு வெற்றியாளரான மலேசியாவும் ‘சி‘ பிரிவு இரண்டாம் நிலை வெற்றியாளரான இந்தியாவும் காலிறுதியாட்டத்தில் களம் காண்பதற்கு வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது.

அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகும் பட்சத்தில் மலேசியா தென் கொரியா அல்லது டென்மார்க்கை சந்திக்கும். மற்றொரு வாக்கெடுப்பில் நடப்பு தோமஸ் கிண்ண சாம்பியனான இந்தோனேசியா சீனாவை சந்திக்கிறது. ‘சி‘ பிரிவு வெற்றியாளரான தைவான் ஜப்பானுடன் மோதுகிறது.

இவ்வாண்டு போட்டியில் சிறந்த ஆட்டக்காரர்களை இந்தியா களமிறக்கியுள்ளதால் காலிறுதியாட்டத்தை தாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்று மலேசிய பூப்பந்து சங்கத்தின் உயர் தரப் பிரிவு நிர்வாக டாக்டர் திம் ஜோன்ஸ் கூறினார்.

எனினும், ஜப்பானைக் எதிர்கொண்டப் பின்னர் யாருடனும் மோத முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தோமஸ் கிண்ண வெற்றியாளரான ஜப்பானை வீழ்த்தியது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவை எதிர்கொள்ளும் போதும் இதே உத்வேகத்துடன் ஆடுவதற்குரிய மனோதிடத்தை மலேசிய அணி கொண்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :