ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

15-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற  டத்தோஸ்ரீ அன்வாரின் தலைமை பலப்படுத்துவோம்

கிள்ளான் மே 13, பிகேஆர் தேசிய உதவித் தலைவர் வேட்பாளரான  டாக்டர் ஜி.குணராஜ், தான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற  ரீதியில் செந்தோசா தொகுதி மக்களுக்கு பல வகையாலும் சமூக, கல்வி, பொருளாதார சேவையை வழங்க  அதிகாரமளிக்க  உதவும் திறவுகோல் கட்சி பதவி என்கிறார்.

தேசிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட  டத்தோஸ்ரீ அன்வாரின் கையை பலப்படுத்தும் வண்ணம் சிலாங்கூர்  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி   இம்முறை  கட்சித் தேர்தலில் தேசிய  உதவித் தலைவர் பொறுப்புக்கு  போட்டியிடுகிறார்.

ஆக டத்தோஸ்ரீ  அன்வாரின் தலைமைத்துவத்தை தேசிய நிலையிலும், மாநில நிலையில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன்  இணைந்து பணி செய்வதே சிறப்பு.  இது   இந்தியர்களுக்கு இந்த தொகுதியில்  மட்டுமின்றி, மாநில  மற்றும் தேசிய அளவிலும்   உரிமைகளை பெற  நமது கரத்தை வலுப்படுத்தும் செயல் என்றார் அவர்.

குறிப்பாக கடந்த ஓர் ஆண்டாக, தேசிய உதவித் தலைவர் பொறுப்பில் எவரும் இல்லாமையால்  தலைமைத்துவத்தில் இந்தியர்களின்  குரலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த  நிலையை சரிப்படுத்தவும், மாநில மற்றும் தேசிய நிலை தலைவர்களுடன்  இணைந்து வேலை செய்யக்கூடிய ஒரு இந்தியர் கட்சியின் உதவித் தலைவராக பல இன உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க படவேண்டும் என்றால் ஒரு பலமான, நாடறிந்த  வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதால் தங்கள் சட்டமன்ற உறுப்பினரான  டாக்டர் குணராஜ் அவர்களை தேசிய உதவித்தலைவர் பொறுப்புக்கு போட்டியிட பிகேஆர் உறுப்பினர்களும் வட்டாரத் தலைவர்களும் வற்புறுத்தியதாக கூறினார்  திரு. நயனேஸ்வரன் சுப்ரமணியம்.

நாடு 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மலேசிய அரசியலில் மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர்-இல் உட்கட்சித் தேர்தல், இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கிறது.

இந்தச் நேரத்தில், பிகேஆர் என்னும் அரசியல் இயக்கத்தின் இன்றையத் தேவை ஒற்றுமையும் வலிமையும் தான். இவை இரண்டையும் கட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் உயர்த்திப் பிடித்தால் நாளைய மலேசியாவை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வழிநடத்தும் சூழல் உருவாகும்.

இந்த ஒற்றைச் சிந்தனையின் அடிப்படையில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்திலும் பிகேஆர் தேசிய உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.


Pengarang :