ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாமான் கின்ராராவில்  வெள்ளத் தடுப்புத் திட்டம் மே 18 ஆம் தேதி தொடங்கும்

சுபாங் ஜெயா, மே 13- தாமான் கின்ராரா பகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டம் இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கும் என்று கின்ராரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ  ஹான் கூறினார்.

சுமார் 800,000 வெள்ளி செலவில் வெள்ளத் தடுப்பணை நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்திற்கு உண்டாகும் செலவை சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) ஏற்றுக்கொள்ளும் என்றார்.

அந்த தடுப்பணை 300 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் 2 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என்று ஜே.பி.எஸ். தம்மிடம் தெரிவித்த தாக அவர் சொன்னார்.

கோலாம் போகோல் பகுதியில் குளத்தை ஆழப்படுத்தும் பணிகளை கோலாலம்பூர் மாநகர் மன்றமும் ஜே.பி.எஸ்.சும் மேற்கொண்டு வருகின்றன. அக்குளம் ஆழம் குறைந்து காணப்படுவதால் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுகிறது என்றார் அவர்.

தாமான் கின்ராரா பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்காக குளத்தை ஆழப்படுத்தும் பணி மற்றும் வெள்ளத் தடுப்பணை நிர்மாணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக இங் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :