ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

செந்தோசா தொகுதியின் சித்திரை முத்துக்கள் நிகழ்வு – ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் இன்று நடைபெறும்

கிள்ளான், மே 16- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டிலான “ செந்தோசா சந்தோசமான சித்திரை முத்துக்கள்“ நிகழ்வு இன்று மாலை 4.00 மணி முதல் இங்குள்ள தாமான் செந்தோசா, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறுகிறது.

இரவு 11.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வு செந்தோசா தொகுதியிலுள்ள ஆலயங்கள் மற்றும் இந்து சமய அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்ப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்த நிகழ்வில் மருத்துவ முகாம், சிறார்களுக்கான  போட்டிகள், அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்க்ளை கௌரவிக்கும் நிகழ்வு, அதிர்ஷ்டக் குலுக்கு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறவுள்ளதாக மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் தெரிவித்தார்

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக மக்கள் வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் குடும்பத்துடன் கலந்து பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.

இந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வையொட்டி இரவு 8.00 மணியளவில் கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த கலை நிகழ்ச்சியில் நாட்டின் பிரபல கலைஞர்களோடு செந்தோசா  தொகுதி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட்ட ஜூனியர் சூப்பர் ஸ்டார் போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து போட்டியாளர்களும் இதில் கலந்து தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்துவர் என்றார்.

இன்றைய விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு செந்தோசா தொகுதி மக்களை குணராஜ் கேட்டுக் கொண்டார்.


Pengarang :