ECONOMYSELANGORTOURISM

விசாக தினத்தின் போது சிலாங்கூர் புரூட் வேலிக்கு 900க்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்தனர்

ஷா ஆலம், 19 மே: சிலாங்கூர் புரூட் வேலிக்கு (SFV) கடந்த திங்கட்கிழமை விசாக தின பொது விடுமுறையில் 928 பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

மே 16 அன்று பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை இந்த மாதத்தில் மிக அதிகமாக இருந்தது என்று அதன் சந்தைப்படுத்தல் மேலாளர் நோர் ரஷிதா முகமது ரைஹான் கூறினார்.

“மொத்தத்தில், சனிக்கிழமை முதல் திங்கள் வரையிலான மூன்று நாட்களுக்கு 1,600 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஒரு புதிய ஈர்ப்பாக சிலாங்கூர் புரூட் வேலியில் சிறார்களுக்கான பொம்மை வாத்து மீன்பிடி நடவடிக்கைகளையும் அதற்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளையும் அவர் ஏற்படுத்தி கொடுப்பதாக கூறினார்.

சிலாங்கூர் புரூட் வேலி ஆனது பெஸ்தாரி ஜெயாவில் கிட்டத்தட்ட 1,000 ஹெக்டேர்  பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பிளிம்பிங், டுரியான், மாம்பழம், கொய்யா, பலாப்பழம், திராட்சை போன்ற 20 வகையான பழங்களைக் கொண்டுள்ளது.


Pengarang :