ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பிளாஸ்டிக் பதனீட்டுத் தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட சிலாங்கூர் அரசு தடை

ஷா ஆலம், மே 19– சிப்பாங்கில் பிளாஸ்டிக் மறுசுழற்சிப் பொருள் பதனீட்டுத் தொழிற்சாலைக்கு தற்காலிக லைசென்ஸ் பெறுவதற்கும் மறுபடியும் மின் இணைப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாநில அரசு நிகாரித்துள்ளது.

சுற்று வட்டார மக்களின் புகார், பிளாஸ்டிக் கழிவுகளால் சூழியலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மாநில மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மாசுபாடு,  முறையாக நிர்வகிக்காத காரணத்தால் அங்கு குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் ஆகிய விவகாரங்களுக்கு தீர்வு காணும் விதமாக அந்த தொழிற்சாலை மீதான தடை அமல்படுத்தப்படுகிறது என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

தேசிய நிலையிலான கண்ணோட்டத்தில் இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திட்டத்தை மாநில அரசு வரைந்து வருகிறது. இதன் வழி சுற்றுச் சூழலுக்கு நட்புறவான வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :