ANTARABANGSAECONOMY

சிலாங்கூர், தோக்கியோ இருதரப்பு உறவுகளை கலாச்சாரத்தை வலுவாக்க ஒப்புக்கொண்டன

ஷா ஆலம் மே 20 : டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சிலாங்கூர் மற்றும் தோக்கியோ இடையே கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

மலேசியாவுக்கான ஜப்பானிய தூதுவர் தகாஹாஷி கட்சுஹிகோவுடன் அவரது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பில் இந்த உறுதிப்பாடு காணப்பட்டதாக  அமிருடின் கூறினார்.

“மலேசியாவுக்கான ஜப்பானிய தூதுவர் தகாஹாஷி கட்சுஹிகோவின் வருகையை தான் மிகவும் பெருமையாக கருதுவதாகவும், மேலும் இது பல்வேறு தற்போதைய உள்ளூர் மற்றும் பிராந்திய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அவர்களுக்கு வாய்ப்பளித்ததாக கூறினார்.

“அடுத்த சில மாதங்களில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று அவர் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கையாள்வதில் உள்ள சவால்களை சிலாங்கூர்  அணுகும்  முறை குறித்தும் கருத்து பரிமாறிக் கொண்டன என்று அவர் கூறினார்.


Pengarang :