ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பண்டார் பாரு பாங்கியில் ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டம்- 130 பங்கேற்றனர்

உலு லங்காட், மே 22 -  இங்குள்ள பண்டார் பாரு பாங்கி, டேவான் டெம்ஸ்னேயில் நேற்று நடைபெற்ற ஜோப்கேர் எனப்படும் ஐந்தாவது வேலை வாய்ப்புத் தொடரில்  130 வேலை தேடுவோர் கலந்து கொண்டனர்.

நேற்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி, இந்த வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு பதிவு செய்த 270 பேரில் பாதி பேர் நேர்காணலுக்கு   வந்திருந்தனர் என்று சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவின் (யு.பி பி எஸ்.) தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். விஜயன் கூறினார்.

 இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் 99 ஸ்பீட்மார்ட்,  ஒரு மறுசுழற்சி நிறுவனம், ஓல்ட் டவுன் கோபித்தியாம்  மற்றும் புரோட்டான் ஷா ஆலம் உள்ளிட்ட 10 குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்  பங்கேற்றன என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்   பல்வேறு துறைகளில் 200  வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வேலை வாய்ப்புத் திட்டம்  தொடங்கியதில் இருந்து இதுவரை  சுமார் 150 பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று விஜயன் மேலும் குறிப்பிட்டார்.

கிள்ளானில் நடந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் போது 52 பேர் உடனடியாக வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ரவாங்கில் 35 பேருக்கும் புத்ரா ஹைட்சில்  27 பேருக்கும்  டிங்கிலில் 11 பேருக்கும் வேலை கிடைத்தது என்றார் அவர். 

இந்த ஜோப்கேர்  திட்டத்தில் பங்கேற்றுள்ள 15 நிறுவனங்கள் சிலாங்கூர் மக்களுக்கு 3,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது .

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் https://uppselangor.wixsite.com/my-site என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஜோப்கேர்  வேலை வாய்ப்புத் திட்டங்கள் நடைபெறும்  தேதி மற்றும் இடங்கள் பின்வருமாறு:

• மே 22 மற்றும் மே 23 - ஸ்தாப்பாக் டேவான் செர்பகுண், ஆயர் பானாஸ் .

• ஜூன் 4 - கோம்பாக், டேவான் தாமான் கோம்பாக் .

• ஜூன் 11 மற்றும் ஜூன் 12 -தஞ்சோங் காராங், டேவான் டத்தோ ஹொர்மாட்

• ஜூன் 18 - கோல லங்காட்,  டேவான் பந்திங் பாரு .

• ஜூன் 25 -  சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணம் .

Pengarang :