ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 7,000 பேர் பங்கு கொண்டனர்

கிள்ளான், மே 22- இங்குள்ள பண்டமாரான், விளையாட்டு மைய சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுடன் கடந்த ஒரு வார காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த மாநில அளவிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இரவு 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் மந்திரி பெசார் கலந்துரையாடியதோடு சிறார்களுக்கு பண அன்பளிப்புகளையும் வழங்கினார். இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுக்காக பல்வேறு வகையான பதார்த்தங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன.

மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களை இலக்காக கொண்டு சிலாங்கூர் அரசு பெரிய அளவிலான நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்த து. கடந்த 15 ஆம் தேதி உலு சிலாங்கூர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த பொது உபசரிப்பு நேற்று கிள்ளான் மற்றும் பெட்டாலிங்கில் முடிவுக்கு வந்த து.

உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், சிப்பாங், கோல லங்காட், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த பொது உபசரிப்புகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


Pengarang :