ECONOMYMEDIA STATEMENT

உணவக உதவியாளருக்கு RM2,500 அபராதம் 

கூலாய், மே 23 – அலங்காரச் சிலையை குப்பைத் தொட்டியில் வீசிய ஒரு உணவக உதவியாளருக்கு 2,500 ரிங்கிட் அபராதம், தவறினால் மூன்று மாத சிறை தண்டனை என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 23 வயதான கேப்ரியல் ஜங்காக் அனாக் ஸ்டீவர்டுக்கு மாஜிஸ்திரேட் ஷரிபா மலீஹா சையத் ஹுசின் முன்னிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி இந்த தண்டனையை வழங்கினார். 

கடந்த மே 15 ஆம் தேதி காலை 9 மணியளவில், செனாயில் உள்ள தாமான் சைன்டெக்ஸ் 13 இல் உள்ள ஒரு வீட்டின் முன், டி.எஸ்.தினேஸ்வரனின் அலங்காரச் சிலையை அகற்றி, குப்பைத் தொட்டியில் வீசியதால், 25 ரிங்கிட் நஷ்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

துணை அரசு வழக்கறிஞர் எட்லின் வோங் வழக்கு தொடர்ந்தார்.


Pengarang :