ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோழிக்கான தேவைகள் நிறைவா? யார் சொல்வது உண்மை ?

கோலாலம்பூர், மே 23- சந்தையில் கோழிக்கான தேவையை ஈடுசெய்ய தாங்கள் தயாராக உள்ளதாக கோழி பண்ணையாளர்கள் உறுதியளித்துள்ளனர். கால்நடை சேவைத் துறை அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் போது அவர்கள் அந்த உத்தரவாதத்தை வழங்கினர்.
குறிப்பிட்ட சில கும்பல்கள் கோழி உற்பத்தியை நிறுத்தி வைத்த காரணத்தால் சந்தையில் கோழி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கால்நடைச் சேவைத் துறை இந்த ஆய்வினை மேற்கொண்டதாக விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

ஆனால் , கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் அங்கங்கே இறைச்சி கோழிகள் பற்றாக்குறை நிலவுவதாக  பொதுமக்கள் கூறிவரும் புகார் குறித்து  பதிலளித்த  உணவு தொழில்துறை அமைச்சு,  அந்த புகாரில் முழுமையாக உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.
அமைச்சு, உள்நாட்டுத் தேவையை ஈடு செய்வதற்கு ஏதுவாக போதுமான அளவு கோழிகளை விநியோகிக்க  பண்ணையாளர்கள்  தயாராக உள்ளதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர் என்றது.

எனினும், சில பண்ணைகளில் கோழி வளர்ச்சி பெறுவதில் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குகின்றன. கோழி தீவனத்தின் தரம், நோய்த் தொற்று மற்றும் தற்போதைய வறட்சி நிலை போன்றவை உற்பத்தியாளர்களுக்கு குறிப்பாக, திறந்த வெளி பண்ணை நடத்துநர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சு குறிப்பிட்டது.

இப்பிரச்னைகள் காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் கோழி விநியோகத்தில் இடையூறும் ஏற்பட்டுள்ளதை அது சுட்டிக் காட்டியது.

கோழி விநியோகம் சீராக உள்ளதை உறுதி செய்ய இத்துறை சார்ந்த அனைத்து தரப்பினருடனும் அமைச்சு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு கூறியது.

 

 


Pengarang :