ALAM SEKITAR & CUACAECONOMY

வனவிலங்குச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தால் வெ.10 லட்சம் அபராதம், 15 ஆண்டுச் சிறை- ஜூலையில் சட்டம் அமல்

கோலாலம்பூர், மே 25- வரும் ஜூலை மாதம் அமலுக்கு வரவிருக்கும் 2010 ஆம் ஆண்டு வன விலங்கு மறுவாழ்வுச் சட்டத் திருத்தத்தின் (சட்டம் 716) வழி வன விலங்கு சம்பந்தப்பட்ட குற்றங்களைப் புரிவோருக்கு விதிக்கப்படும் அபராதம் 500,000 வெள்ளியிலிருந்து 10 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்படுகிறது.

மக்களவை மற்றும் மேலவையின் அங்கீகாரத்திற்கு பிறகு இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்புத் துறையின் (பெர்ஹிலித்தான்) தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹஷிம் கூறினார்.

அபராத உயர்வு தவிர்த்து குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளிலிருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தவும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

வன விலங்குகளிடம் கூடுதல் பரிவு காட்டுவதற்குரிய அவசியத்தை உணர்வதற்குரிய வாய்ப்பினை இந்த சட்டத்திருத்தம் பொது மக்களுக்கு வழங்கும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் சொன்னர்.

2021 ஆம் ஆண்டு வன விலங்கு மறுவாழ்வு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது.


Pengarang :