ECONOMYMEDIA STATEMENTPBT

செத்தியா ஆலம், லோட்டசில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகச் சேவை

ஷா ஆலம், மே 26- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகச் சேவை செத்தியா ஆலம் லோட்டஸ் பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் மதிப்பீட்டு வரி மற்றும் அபராதத தொகையைச் செலுத்தலாம்.

மாநகர் மன்றத்துடனான அலுவல்களை பொது மக்கள் வார இறுதி நாட்களில் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த சேவை வழங்கப்படுவதாக மாநகர் மன்றத்தின் வர்தக மற்றும் தொடபுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றம் வழங்கும் இந்த சேவையை முறையாகப் பயன்படுத்தி பயன் பெறுமாறு அவர் வட்டார மக்களை கேட்டுக் கொண்டார். இந்த சேவை குறித்த மேல் விபரங்களுக்கு 013-3380551 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :