ECONOMYMEDIA STATEMENT

ஆண்டுக் கூட்டத்தை நடத்தத் தவறிய கோய் டிரோப்பிக்கா அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திற்கு வெ 14,000 அபராதம்

சுபாங் ஜெயா, மே 26- ஆண்டுக் கூட்டத்தை நடத்தத் தவறியதற்காக  கோய் டிரோப்பிக்கா பூச்சோங் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத்திற்கு (ஜே.எம்.பி.) 14,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் அந்த குடியிருப்பின் 10 வது ஆண்டுக் கூட்டத்தை நடத்தத் தவறியதற்காக அந்த கூட்டு மன்றத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட எண்மருக்கு எதிராக சுபாங் ஜெயா மாஜிஸ்திரேட் (முனிசிபல்) நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டதாக மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ அனுவார் ஹோஹாரி கூறினார்.

அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் அவர்களில் எழுவருக்கு மாஜிஸ்திரேட் தலா 2,000 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மரணமடைந்து விட்டதால் அவருக்கு எதிரான அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற மாநகர் மன்றத்தின் மாதந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 


Pengarang :