ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

மலாக்கா, மே 29- ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்காக குரல் எழுப்புதவற்கும் சிறப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மலேசிய-இந்தோனேசிய ஊடகவியலாளர் சங்கத்தின் (இஸ்வாமி) தலைவர் டத்தோ மொக்தார் ஹஷம் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் மலேசிய ஊடகவியலாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும் இதுவரை அது செயல்வடிவம் காணவில்லை என்று அவர் சொன்னார்.

மலேசியாவில் ஊடகங்கள் தொடர்புடைய பல அமைப்புகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஒரே குடையின் கீழ் செயல்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டிற்கான தேசிய ஊடகவியலாளர் தினத்தை (ஹவானா) முன்னிட்டு இங்குள்ள பண்டார் ஹிலிரில் இன்று நடைபெற்ற தேசிய ஊடக ஆய்வரங்களில் வரவேற்புரை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“மக்கள் குரல், தேசிய அபிலாஷை“ எனும் கருப்பொருளிலான இந்த ஹவானா 2022 கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

இளம் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய சிறப்பு அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்குரிய உந்து சக்தியாக இந்த 2022 ஹவானா தினம் விளங்கும் எனத் தாம் நம்புவதாக மொக்தார் கூறினார்.

இன்றைய ஊடக ஆய்வரங்கு குறித்து கருத்துரைத்த அவர், மலேசியாவில் செய்தி ஆசிரியரும் ஊடகத் துறையின் எதிர்காலம் குறித்து  சிந்திப்பதற்குரிய களமாக இந்த இது விளங்கும் என்றார் அவர்.


Pengarang :