ECONOMYHEALTHNATIONAL

ஜிஃப் ரக வேர்க்கடலை பட்டரை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ள இறக்குமதி நிறுவனத்திற்கு உத்தரவு

கோலாலம்பூர், மே 30- “ஜிஃப்“ என்ற பெயர் கொண்ட வேர்க்கடலை பட்டரை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி அதன் இறக்குமதி நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அந்த உணவுப் பொருள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை மலேசிய உணவு பாதுகாப்பு தகவல் முறையின் தரவுகள் காட்டுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அந்த உணவுப் பொருள் சால்மோனெல்லா வகை பாக்டீரியாவினா மாசடைந்துள்ள காரணத்தால் அமெரிக்க சந்தையிலிருந்து அது மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளத் தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

சால்மொனெல்லா பாக்டீரியாவினால் மாசுபட்டுள்ள காரணத்தால் ஜிஃப் ரக வேர்க்கடலை பட்டரை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமலாக்கத் தரப்பு உத்தரவிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அந்த ஜிஃப் வகை வேர்க்கடலை பட்டர் கனடா, தாய்லாந்து, ஸ்பெயின், கொரியா, ஜப்பான், தைவான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

அந்த உணவுப் பொருளை சந்தையிலிருந்து மீட்டுக்  கொள்ளும்படி இறக்குமதி நிறுவனம் பணிக்கப்பட்டுள்ளதோடு அவற்றை வாங்க வேண்டாம் என பொது மக்களும் அறிவுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.


Pengarang :