ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய சுற்றுலா மையமாக ஈயக் கப்பலை அடையாளப்படுத்த நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 3–  சிப்பாங் நகராண்மைக் கழகம் சுமார் ஒரு கோடி வெள்ளி செலவில் மேற்கொண்ட நடவடிக்கையின் வாயிலாக சிலாங்கூர் மாநிலம் உலகின் மிகப்பெரிய ஈயக் கப்பலைப் பெற்றுள்ளது.

ஆறாயிரம் டன்னுக்கும் மேற்பட்ட எடை கொண்ட இந்த ஈயக் கப்பல் விரைவில் மாநிலத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.

அந்த ஈயக் கப்பலை பழுது பார்க்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். யுனைஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

அந்த ஈயக் கப்பலை சிறந்த சுற்றுலா மையமாகவும் அந்த பகுதியை மேம்படுத்துவதற்குரிய தளமாகவும் உருவாக்குவதற்கு ஏதுவாக மலாய் பாரம்பரியம் மற்றும் கலாசாரக் கழகத்துடன் ஒத்துழைக்கும்படி சிப்பாங் நகராண்மைக் கழகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கையின் டிங்கில் நகரில் உள்ள அந்த ஈயக் கப்பலை வரலாற்று அருங்காட்சியகமாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில அரசு முன்னதாக கூறியிருந்தது.


Pengarang :