ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலர் வளர்ப்புத் துறை கடந்தாண்டில் வெ. 41.7 கோடி வெள்ளி ஏற்றுமதியை பதிவு செய்தது

கோத்தா பாரு, ஜூன் 4- மலர் வளர்ப்புத் துறை குறிப்பாக உயர் மதிப்பு கொண்ட ஆர்க்கிட் மலர்களின் ஏற்றுமதியின் மூலம் கடந்தாண்டில் 41 கோடியே 73 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வருமானம் ஈட்டப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் இதன் ஏற்றுமதி மதிப்பு 40 கோடியே 30 லட்சம் வெள்ளியாக இருந்ததாக விவசாயம் மற்றும் உணவுத் தொழில் துறை துணையமைசர் டத்தோஸ்ரீ அகமது ஹம்சா கூறினார்.

கடந்தாண்டில் நாட்டில் 27 கோடி வெள்ளி மதிப்புள்ள  மொத்தம் 41 கோடியே 40 லட்சம் மலர் ஜாடிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தை வளர்ச்சியை உயர்த்துவது, உயர் தரம் கொண்ட மலர்களைத் உற்பத்தி செய்வது போன்றவை தேசிய விவசாய உணவுக் கொள்கை 2.0 திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வியூகங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மலர் உற்பத்தியாளர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்குவதற்கும் புதிய சந்தைகளைக் கண்டறிவதற்கும் உலகலாவிய நிலையில் மலர் உற்பத்தி துறைக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி பெரிதும் துணை புரியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இதன் மூலம் வருமான ரீதியாக நாட்டின் பொருளாரம் முன்னோக்கிச் செல்லும் என்பதோடு இதனைத் சார்ந்துள்ள இதர பல துறைகளும் விரிவாக்கம் காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

இங்குள்ள கோத்தா பாரு கிராமப் புற உருமாற்று மையத்தி ஆர்க்கிட், மலர் மற்றும் மூலிகை விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :