ECONOMYHEALTHSELANGOR

வார இறுதியில் மூன்று மாவட்டங்களில் சிலாங்கூர் அரசின் இலவச மருத்துவ பரிசோதனை

ஷா ஆலம், ஜூன் 9– சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் இவ்வார இறுதியில் உலு லங்காட், கோல லங்காட், மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த இலவச பரிசோதனைத் திட்டம் லெம்பா ஜெயா மற்றும் புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்றத் தொகுதிகள் நிலையில் அம்பாங், பாடாங் தாமான் கோசாசில் வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிஜங்காங் தொகுதி நிலையிலான இலவச பரிசோதனை கம்போங் மேடான், டேவான் வாவாசானிலும் சுங்கை பூரோங் மற்றும் பெர்மாத்தாங் தொகுதிக்கான பரிசோதனை கம்போங் ஸ்ரீ திராம் ஜெயா, சமூக மண்டபத்திலும் நடத்தப்படும்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மேற்கொள்ள மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பொதுவான மருத்துவ சோதனை, நீரிழிவு சோதனை, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சோதனை, மார்பக புற்றுநோய் சோதனை, புரோஸ்டேட் சோதனை போன்றவை மேற்கொள்ளப்படும்.

இந்த இந்த திட்டத்தில் இதுவரை 3,215 பேர் பங்கேற்று பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


Pengarang :