ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் மக்கள் பரிவு பயணத் திட்டம் ஜூன் 29 இல் அம்பாங்கில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 12- “சிலாங்கூர் பென்யாயாங்“ எனப்படும் மக்கள் பரிவு பயணத் திட்டம் வரும் 19 ஆம் தேதி அம்பாங், பாடாங் தாமான் கோசாஸ்சில் நடைபெறும்.

உலு லங்காட் மாவட்ட நிலையிலான இந்த பயணத் திட்டம் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில மீன் வளத்துறை கூறியது.

“அம்பாங், பாடாங் தாமான் கோசாசில் வரும் ஜூன் 19 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் சிலாங்கூர் பென்யாயாங் பயணத் திட்டத்தில் பங்கேற்க அம்பாங் வட்டார மக்களை அழைக்கிறோம். இந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அத்துறை தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த பயணத் தொடர் மாநில அரசின் 23 துணை நிறுவனங்களின் பங்கேற்புடன் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் (கட்டமைப்பு) கழகம் முன்னதாக கூறியிருந்தது.

இந்த திட்ட அறிமுக  விழாவின் ஒரு பகுதியாக  ஏரோபிக் விளையாட்டு, சமையல் போட்டி, மலர்  ஜோடனை, மக்கள் விளையாட்டு, மின்-விளையாட்டு உள்ளிட்ட பல அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநில அரசின் திட்டங்கள் வழி மக்கள் மேலும் ஆக்ககரமான முறையில் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக பெடுலி ராக்கயாட் திட்டத்திற்கு மாற்றாக சிலாங்கூர் பென்யாயாங்“ எனப்படும் மக்கள் பரிவு திட்டம் 35 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.


Pengarang :