ECONOMYMEDIA STATEMENT

ஓட்டப்பந்தயத்தை முன்னிட்டு பெ. ஜெயாவில் சாலைகள் 19 ஆம் தேதி மூடப்படும்

ஷா ஆலம் ஜூன் 14–  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறவிருக்கும் 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தய நிகழ்வுக்காக வரும் 19 ஆம் தேதி மாநகரின் பலவேறு சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.

அன்றிரவு 12.00 மணி தொடங்கி காலை 11.00 மணி வரை சாலை மூடல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று மாநகர் மன்றத்தின் ஊடக மற்றும் வர்த்தக தொடர்பு பிரிவு கூறியது.

இந்த ஓட்டப்பந்தயம் நடைபெறும் போது போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகர் மன்ற அமலாக்கப் பிரிவினரின் ஆலோசனையை கேட்டு நடக்கும்படி வாகனமோட்டிகளை அது கேட்டுக் கொண்டது.

இப்போட்டியில் பங்கேற்போர் தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தாமல் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாக இந்நிகழ்வுக்கு வருவோர் பொது வாகனங்களைப் பயன்படுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த ஓட்டப்பந்தயம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற www.mbpj.gov.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு செயலகத்தின் முகவரி- Petaling Jaya 10 KM, Puncak Ventures Sra Sdn. Bhd di talian 019- 3149766/011-11565575 /019 5541902.

ஓட்டப்பந்தய நிகழ்வுக்காக மூடப்படும் சாலைகள் பின்வருமாறு-

  • Jalan Yong Shook Lin
  • Jalan Barat
  • Jalan Utara
  • Jalan Prof Khoo Kay Kim
  • Jalan Prof. Diraja Ungku Aziz
  • Jalan Bukit 11/2
  • Jalan 12/13
  • Jalan 12/16
  • Jalan Kemajuan
  • Jalan 12/15
  • Jalan Utara
  • Jalan Timur
  • Jalan Sultan Timur

Pengarang :