ANTARABANGSAECONOMYSUKANKINI

வங்காளதேசத்தை 4-1 கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது மலேசியா

ஷா ஆலம், ஜூன் 15- இங்குள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 2023 ஆசிய கிண்ண தகுதிச் சுற்று கால்பந்தாட்டப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை மலேசிய அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் வழி அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்பினை ஹரிமாவ் மலாயா அணி பெற்றுள்ளது.

மலேசியாவின் வெற்றி கோல்களை சஃபாபி ரஷிட், டியோன் கூல்ஸ், ஷாபிக் அகமது மற்றும் டேரேன் லோக் ஆகியோர் முறையே 16, 38, 47, மற்றும் 73 வது நிமிடங்களில் அடித்தனர்.

இந்த வெற்றியின் வழி மலேசியா 42 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் தகுதி அடிப்படையில் இந்த ஆசிய கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை பெற்றுள்ளது.

இப்போட்டியில் வங்காளதேசத்தின் ஒரே கோலை முகமது இப்ராஹிம் ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் புகுத்தினார்.

முன்னதாக நேற்று  மாலை நடைபெற்ற “இ“ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் பாஹ்ரின் அணி துர்க்மேனிஸ்தான் குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆகிய கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது.


Pengarang :