ECONOMYHEALTHSELANGOR

வார இறுதியில் ஐந்து தொகுதிகளில் மாநில அரசின் இலவச மருத்துவ முகாம்

ஷா ஆலம், ஜூன் 17– சிலாங்கூர் சாரிங் எனப்படும் மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் இவ்வார இறுதியில் ஐந்து தொகுதிகளில் நடைபெறும்.

நாளை சனிக்கிழமை டிங்கில், தாமான் கெமிலாங் சமூக மண்டபத்திலும் சுங்கை ராமால் தொகுதியில் பண்டார் பாரு பாங்கி, செக்சன் 4 சமூக மண்டபத்திலும் இந்த இயக்கம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை சுங்கை பீலேக், ட்சீ மின் சீனப்பள்ளியில் நடைபெறும் வேளையில் தெராத்தாய் மற்றும் பண்டான் இண்டா தொகுதிகள் நிலையிலான மருத்துவ இயக்கம் தாமான் கோசாஸ் திடலில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

நோய் தொடர்பான மருத்துவ பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடல் பருமனானவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றாதவர்களை இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் இலக்காக கொண்டுள்ளது.

சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் இந்த சோதனை இயக்கத்தின் வாயிலாக சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாங்கில் இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் தொடர்பான மேல் விரங்களை http://selangorsaring.selangkah.my என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், 1-800-22-6600 என்ற எண்களில் செல்கேர் அமைபையும் http://drsitimariah.com/talian-suka/ என்ற அகப்பக்கம் வாயிலாக சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்புடனும் தொடர்  கொள்ளலாம்.


Pengarang :