ECONOMYMEDIA STATEMENT

குழந்தை சயிஃபாவின் மரணம் குறித்து விரிவான விசாரணை – காவல்துறை

சிரம்பான், ஜூன் 24 – பிப்ரவரி மாதம் இங்குள்ள பண்டார் ஸ்ரீ சென்டயானில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 15 மாத பெண் குழந்தை நூர் ராணியா அசயிஃபா யுசேரி இறந்தது குறித்த விசாரணைகளை போலீசார் முடித்துள்ளனர்.

நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்லான் காலிட், விசாரணையில் சாட்சி அறிக்கைகள் மற்றும் தடயவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் நோயியல் நிபுணர் மற்றும் வேதியியலாளரின் சேவை ஆகியவை அடங்கும் என்றார்.

விசாரணை அறிக்கை நெகிரி செம்பிலான் வழக்குப் பிரிவுத் தலைவருக்கும் அட்டர்னி ஜெனரல் அவைக்கும் அனுப்பப்பட்டது. குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

“மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு அட்டர்னி ஜெனரலால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணை ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று ருஸ்லான் கூறினார். ஜோகூர் ரீஜெண்டின் மனைவி சே புவான் பெசார் கலீதா புஸ்டமாம் குழந்தை சியிஃபாவின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Pengarang :