ECONOMYMEDIA STATEMENT

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சந்தேக நபரின் துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்தனர்

கோலாலம்பூர், ஜூன் 25 – 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த ஒரு குற்ற செயல் குழுவின் முக்கிய புள்ளியுன்  துப்பாக்கிச் சூட்டில் ஜூன் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் ஸ்மித் & வெசன் ரிவால்வர் மற்றும் 13 தோட்டாக்களை போலீசார் மீட்டனர்.

ஜூன் 21ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு திரும்பி, சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சாலாக் செலாத்தான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா எஸ்டிமா வாகனத்தை ஆய்வு செய்தபோது, இதனைக்    கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பை ஒன்றில் துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் மற்றும் பண உறையில் ஏழு தோட்டாக்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்

“துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்னர் சந்தேக நபர் இந்த வாகனத்தை பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 உளவுத்துறையின் அடிப்படையில், அந்த துப்பாக்கி பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என்று போலீசார் நம்புவதாகவும், மீதமுள்ள கும்பலைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருவதாகவும் அஸ்மி கூறினார்.

வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப் புலனாய்வு நடவடிக்கை அறையை 03-21460685 அல்லது விசாரணை அதிகாரி ஏஎஸ்பி முகமது ஹஸ்னி ஹுசின் 019-998 4444 அல்லது கோலாலம்பூர் போலீஸ் ஹாட்லைன் 03-2115 9999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :