ALAM SEKITAR & CUACAANTARABANGSAECONOMY

ரிக்டர் கருவியில் 6.0 எனப் பதிவான  நிலநடுக்கம் வட பிலிப்பைன்சை உலுக்கியது

மணிலா, ஜூலை 1- ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான நிலநடுக்கம் வட பிலிப்பைன்சின் க காயன் மாநிலத்தை இன்று அதிகாலை உலுக்கியது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வுக் கழகம் கூறியது.

கேயாலான் நகரிலுள்ள டலுபுரி தீவின் தென்கிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவிலும்  சுமார் 27 கிலோமீட்டர் ஆழத்திலும்  அந்த நில நடுக்கம் மையமிட்டிருந்ததாக அந்த ஆய்வுக் கழகத்தை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த பூகம்பத்தால் ஏற்பட்ட நில அதிர்வு அம்மாநிலத்தின் அருகிலுள்ள நகரங்களிலும் உணரப்பட்டது. நில நடுக்கத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் தொடர்ச்சியாக உணரப்பட்டதாகவும் அந்த ஆய்வுக் கழகம் தெரிவித்தது.

பிலிப்பைன்ஸ் நாடு “ரிங் ஆஃப் பையர்“ எனும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி பூகம்பம் தொடர்புடைய பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன.


Pengarang :