ECONOMYNATIONAL

பாக்கெட் சமையல் எண்ணெய் பற்றாக்குறைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

அலோர் ஸ்டார், ஜூலை 2- ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டு வரும் பாக்கெட் சமையல் எண்ணெய் பற்றாக்குறைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

அந்த உதவித் தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெயை பொட்டலமிடும்  மற்றும் விநியோகிக்கும் பணியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைந்து மேற்கொண்டப் பின்னர் இந்த பற்றாக்குறைப் பிரச்னை களையப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் அஸ்மான்  ஆடாம் கூறினார்.

அந்த மானிய விலையிலான சமையல் எண்ணையின் விநியோகம் மாதம் 60,000 மெட்ரிக் டன்னாக தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் 60,000 மெட்ரிக் டன் எண்ணெயை அரசாங்கம் தொழிற்சாலைகளிடம் ஒப்படைக்கும். பின்னர் அந்த எண்ணெய் பெட்டலமிட்டு விநியோகிக்கும் பணிக்காக விநியோக நிறுவனங்களிடம் பகிர்ந்தளிக்கப்படும் என அவர்  சொன்னார்.

கிலோ ஒன்றுக்கு இரண்டரை வெள்ளி விலையில் விற்கப்படும் இந்த சமையல் எண்ணெய்க்கான கூடுதல் தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. இதன் காரணமாகவே இந்த எண்ணெய்க்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என்றார் அவர்.

 


Pengarang :