ECONOMYMEDIA STATEMENT

வெள்ள அகதிகளுக்கு உதவ சிலாங்கூர் தன்னார்வலர் குழுவினர் பாலிங் பயணம்

ஷா ஆலம், ஜூலை 5- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் உள்ள உடனடி நடவடிக்கை குழுக்கள் (பந்தாஸ்) பாலிங் செல்ல தயாராகி வருகின்றன.

மாநில அரசு தற்போது கெடா அரசு நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உதவிப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

டீம் சிலாங்கூர் தன்னார்வலர் குழு மற்றும் தேசிய சேவைப் பிரிவு ஆகியவையும் பாலிங் செல்வதற்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

நேற்று மாலை 4. மணியளவில் பெய்த அடை மழை காரணமாக பாலிங் வட்டாரத்திலுள்ள ஒன்பது கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பேரிடரில் கர்ப்பிணி ஒருவர் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

மேலும் 300 குடும்பங்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :