ECONOMYSELANGORSMART SELANGOR

பிங்காஸ் – மாநில அரசின் புதிய உதவித் திட்டம்

ஷா ஆலம் – மாநில மக்களின் வளமான வாழ்வுக்கு  பக்காத்தான் அரசால் வடிவமைக்கப்பட்ட  பல திட்டங்களில் ஒன்று கிஸ் எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம். இத்திட்டம்  கடந்த ஜூலை 1 முதல் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் (பிங்காஸ்) என்ற பெயரில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவிட்-19க்குப் பிறகு தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் குடும்ப வருமானம் RM 3000 க்கும் குறைவாக  கொண்டு இருக்கும் குடும்பங்களுக்கு  உதவுவது இத்திட்டத்தின்  தலையாய நோக்கமாகும்.  குறிப்பாக  கணவன் இன்றி  பிள்ளைகளை  வைத்துக் கொண்டு சிரமப்படும்  தனித்து வாழும்  தாய்மார்களுக்கு  உதவ ஆண்டுக்கு  RM3,600 அல்லது மாதத்திற்கு RM300 உதவி வழங்கும்  ஒரு திட்டமாகும்.

அண்மையில் இத்திட்டம் குறித்து  குறிப்பிட்ட சிலாங்கூர் மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM10.8 கோடி ஒதுக்கீட்டில் சிலாங்கூரில் 30,000 குடும்பங்கள் பிங்காஸ் இன் பலன்களை பெறுவதற்கு மாநில அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

இத்திட்டத்தில் உதவியை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் சிலாங்கூரில் பிறந்தவர்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசித்து வருபவர்களாக இருக்க வேண்டும். மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் களாகவும் இருக்க வேண்டும். அதுமட்டும்மின்றி 18 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதினரை கொண்ட  குடும்பங்களாக இருக்க வேண்டும்.

பிங்காஸ் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க மற்றும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களும்  அன்றாட தேவைகளை நிறைவு செய்துக் கொள்வதை  உறுதிப்படுத்தும்  திட்டமாகும் .  பிங்காஸ் திட்டத்தின் கொள்முதல் பரிவர்த்தனை முற்றிலும் பணமில்லா / இ-வாலட் முறையைப் பயன்படுத்துகிறது.

இத்திட்டத்தில் பங்குப்பெற்று பயன்பெற விரும்பும் குடும்ப தலைவர்கள், மேற்கண்ட  தகுதியின் அடிப்படையில் , www.bingkasselangor.com என்ற இணையதளம் மூலமும்  விண்ணப்பிக்கலாம்.


Pengarang :