ALAM SEKITAR & CUACAECONOMY

ரப்பர் பால் லோரி விபத்து- லுவாஸ் துரித நடவடிக்கையால் நீர் மாசுபாடு தடுக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 7– வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 383.3 கிலோ மீட்டர் தெற்கு தடத்தில் ரப்பர் பால் கொட்டிய சம்பவத்தை பல்வேறு தரப்பினர் துரிதமாக கையாண்ட காரணத்தால் பெர்ணம் ஆற்று ஹெட்வோர்க்ஸ் நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்படுவது தடுக்கப்பட்டது.

ரப்பர் பால் ஏற்றிய டேங்கர் லோரி சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பில் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) தகவல் பெற்றது.

எனினும், பிளஸ் நிறுவனப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் ரப்பல் பால் பெஹ்ராங் ஆற்றில் கலப்பது தடுக்கப்பட்டதாக அது தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

சம்பவ இடத்தில் லுவாஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பிளஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி ரப்பர் பால் ஆற்றில் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் பேராக் எல்லையில் நிகழ்ந்த காரணத்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் அம்மாநில சுற்றுச்சூழல் துறையின் ஒத்துழைப்பும் நாடப்பட்டது.

விபத்தில் சிக்கிய லோரியின் உரிமையாளர் நியமித்த குத்தகையாளர் அப்பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் லுவாஸ் தெரிவித்தது.


Pengarang :