ECONOMYSELANGOR

கோம்பாக்கில் ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனை- காலை 11.00 மணி வரை 500 பேர் வருகை

கோம்பாக், ஜூலை 8- இன்று இங்குள்ள தாமான் கோம்பாக் பெர்மாயில் இன்று நடைபெறும் மாநில அரசின் ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

இன்று காலை 11.00 மணி வரை சுமார் 500 பேர் இந்த மலிவு விற்பனையில் கலந்து கொண்டதை சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வு காட்டியது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள இந்த மலிவு விற்பனை காலை 9.00 மணிக்குத்தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலை 7.00 மணி முதல் பொது மக்கள் வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.

காலை 11.00 மணி நிலவரப்படி சுமார் 500 பேர் இந்த விற்பனையில் கலந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர். ரேலா மற்றும் குடியிருப்பாளர் சங்க செயல்குழுவினரின் ஒத்துழைப்பு காரணமாக இந்த மலிவு விற்பனைச் சந்தை நடைபெற்ற இடங்களில் போக்குவரத்து இடையூறின்றி சீராக காணப்பட்டது.

இந்த பெருநாள் மலிவு விற்பனையை மாநில அரசு கடந்த 5 ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஐந்து இடங்களில் நடத்துகிறது.

இன்று பண்டான் இண்டா தொகுதி நிலையிலான மலிவு விற்பனை இன்று பங்சாபுரி இனாய், புளோக் இ மற்றும் டி பின்புறம் நடைபெறுகிறது.

இந்த மலிவு விற்பனையில் கோழி 15.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேடு முட்டை 12.00 வெள்ளிக்கும் ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய் 2.00 வெள்ளிக்கும் இறைச்சி கிலோ 35.00 வெள்ளிக்கும் உறைய வைக்கப்பட்ட மீன் ஒரு பாக்கெட் 8.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :