ALAM SEKITAR & CUACAECONOMY

பாலிங் வெள்ளம்- பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு சார்பில் விரைவில் நிதியுதவி

கோம்பாக், ஜூலை 11– கெடா மாநிலத்தின் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் சார்பில் விரைவில் நிதியுதவி வழங்கப்படும்.

அப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தொகையை மாநில அரசு முடிவு செய்துள்ள வேளையில் அங்கு மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகள் முற்றுப் பெற்றவுடன் நிதி ஒப்படைப்பு நிகழ்வு நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாங்கள் ஒரு தொகையை நிர்ணயித்துள்ளோம். துப்புரவுப் பணியை முதலில் முடிக்கவுள்ளோம். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நிதியை ஒப்படைப்போம் என்றார் அவர்.

இங்குள்ள இங்கு  நடைபெற்ற சுங்கை துவா தொகுதி நிலையிலான ஹாஜ்ஜுப் பெருநாள் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

காட்டாற்று வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பாலிங் வட்டார மக்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து மாநில அரச பரிசீலித்து வருவதாக மந்திரி புசார் கடந்த  6 ஆம் தேதி கூறியிருந்தார்.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கெடா, யான் வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு 100,000 வெள்ளியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :