Exco Pembangunan Usahawan, Rodziah Ismail bergambar bersama penerima Pembiayaan Skim Hijrah Selangor sempane Jelajah Selangor Penyayang 2022 di Datran Pantai Morib, Kuala Langat pada 25 Jun 2022. Foto HAFIZ OTHMAN
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஹிஜ்ரா வர்த்தக விரிவாக்க கடனுதவி- 4,113 தொழில்முனைவோர் 6.9 கோடி வெள்ளியைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜூலை 13- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வர்த்தக விரிவாக்கத்திற்காக 4,113 தொழில்முனைவோர் சுமார் 6 கோடியே 90 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்திடமிருந்து பெற்றனர்.

பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியில் மிக அதிகமாக 264 வணிகர்களும் அதற்கு அடுத்து சிப்பாங்கில் 245 வணிகர்களும் கோல லங்காட்டில் 242 வணிகர்களும் உலு  லங்காட் மற்றும் சுங்கை புசாரில் தலா 238 வணிகர்களும் இந்த கடனுதவியைப் பெற்றதாக ஹிஜ்ரா அறவாரியத்தின் சந்தை மேம்பாட்டு அதிகாரி முகமது ரிட்டுவான் அஸ்மாரா கூறினார்.

ஐ-பிஸ்னஸ், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான்(நாடி), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி, ஐ-அக்ரோ மற்றும் ஐ-பெர்மூசிம் ஆகிய எழு திட்டங்கள் வாயிலாக அவர்கள் கடனுதவிப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு அவர்களுக்குப் பொருத்தமான கடனுதவியை வழங்குவதை ஹிஜ்ரா பிரதான இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

ஐ-பிஸ்னஸ் திட்டத்திற்கு தொழில்முனைவோர் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 30,000 வெள்ளிக்கும் கீழ் கடன் பெறுவோருக்கு வட்டி விகிதம் குறைந்த பட்சம் 4 விழுக்காடாக உள்ளதோடு அனைத்து வர்த்தகத் துறையினரும் ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கும் வசதியும் இதில் உள்ளது என்றார் அவர்.

இந்த கடனுவிக்கான விண்ணப்பம் எளிதானது. வர்த்தகர்கள் தங்கள்  நிறுவனத்தின் மூன்று மாத வங்கி கணக்கறிக்கையும் மலேசிய நிறுவன ஆணையம் அல்லது ஊராட்சி மன்ற லைசென்சை இணைத்தால் போதுமானது என அவர் தெரிவித்தார்.

ஐயாயிரம் வெள்ளி வரையிலான கடன்களை கிளை அலுவலக நிலையில் அங்கீகரிக்கப்படும் எனக் கூறிய அவர், 6,000 முதல் 29,000 வெள்ளி மற்றும் 30,000 முதல் 50,000 வெள்ளி வரையிலான கடன்களுக்கான விண்ணப்பங்களை தலைமையகம் பரிசீலனை செய்யும்


Pengarang :