ECONOMYSELANGOR

கின்ராரா-புஞ்சா ஜாலில் இணைப்புச் சாலை மூலம் 40,000 பேர் பயன் பெறுவர்

சுபாங் ஜெயா, ஜூலை 15– இங்குள்ள பெர்சியாரான் புஞ்சா ஜாலில் சாலையுடன் கின்ராரா ஜாலில் 6 சாலையை இணைக்கும் புதிய தடத்தின் மூலம் அவ்விரு பகுதிகளையும் சேர்ந்த சுமார் 40,000 பேர் பயன்பெறுவர்.

கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட வடிகால் வசதியுடன் இந்த சாலைத் திட்டம்  பொது மக்கள் கோலாலம்பூர் சென்று வருவதை எளிதாக்கும் என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சுமார் 70 லட்சம் வெள்ளி செலவிலான இச்சாலை இவ்வாண்டு தொடக்கத்திலேயே பூர்த்தியான போதிலும் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவது உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக அதனை போக்குவரத்துக்கு திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

தொடக்கத்தில் அச்சாலையில் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்தும் திட்டம் இல்லை. எனினும், வாகனமோட்டிகளின் வசதிக்காக சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து சுமார் 160,000 வெள்ளி செலவில் அந்த வசதி ஏற்படுத்தப்பட்டது என்றார் அவர்.

இந்த சாலைத் திட்டத்தின் வழி பண்டார் கின்ராரா, டாமாய் உத்தாமா மற்றும் புஞ்சா ஜாலில் மக்கள் கோலாலம்பூர் சென்று வருவதை எளிதாக்கும் என்று  அச்சாலையை நேற்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :