ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

பெட்டாலிங்கில் அடுத்த வார இறுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், ஜூலை 16- பெட்டாலிங் மாவட்ட நிலையிலான இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் அடுத்த வார இறுதியில் நடைபெறும்.
இம்மாவட்டத்தில் நடத்தப்படவிருக்கும் மாநில அரசின் புதிய திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நடப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது.
பொது மக்களிடயே கடுமையான நோய்களுக்கான அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் நடத்தப்படும் இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கத்திற்கு மாநில அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற போலவார்ட் சதுக்கத்தில் நடைபெறும்.
மந்திர பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடக்கி வைக்கப்படும் இந்த நிகழ்வில் கலைஞர்களின் படைப்புகள், ஏரோபிக்ஸ், சமையல் போட்டி, மலர் அங்காரம், மக்கள் விளையாட்டு கண்காட்சி, விற்பனை விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அம்பாங் ஜெயா, தாமான் கோசாஸ், கோலலங்காட், டத்தாரான் பந்தாய் மோரிப் ஆகிய இடங்களில் கடந்த மாதம் நடத்தப் பட்டது.
இத்திட்டத்தின் இறுதி நிகழ்வு வரும் ஜூலை 31 ஆம் தேதி கோம்பாக், பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெறும்.


Pengarang :