ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- லாவோசை வீழ்த்தி வெற்றியாளராக வாகை சூடியது மலேசியா

கோலாலம்பூர், ஜூலை 16- இந்தோனேசியாவின் பெக்காசியில் நேற்ற நடைபெற்ற 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசியான் கால்பந்து சம்மேளனக் (ஏ.எப்.எப்.) கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் லாவோஸ் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா வெற்றியாளராக வாகை சூடியது.
இந்த வெற்றின் வழி கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த கிண்ணத்தை வெல்லும் நாடாக மலேசியாவின் ஹரிமாவ் மூடா அணி விளங்குகிறது.
பெட்ரியோட் சண்ட்ரபாகா அரங்கில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற பி பிரிவின் இறுதியாட்டத்தில் லாவோஸ் அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்விக்க்கு மலேசிய அணி இந்த இறுதியாட்டத்தில் பழி தீர்த்துக் கொண்டது.
நேற்றைய ஆட்டத்தில் மிகுந்த உற்சாத்துடனும் நம்பிக்கையுடனும் களம் இறங்கிய மலேசிய அணி, ஆட்ட்டத்தின் 14வது நிமிடத்தில் முன்னணி ஆட்டக்காரர் முகமது ஃபாய்ஸ் அமிர் ருன்னிஸார் மூலம் தனது முதல் கோலை போட்டது.
இதனைத் தொடர்ந்து தனது ஆட்ட பாணியை மாற்றி அதிதீவிர போக்குடன் ஆடிய லாவோஸ் விளையாட்டாளர்களை மிகவும் லாவகமாக எதிர்கொண்ட மலேசியா அணி ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் தாக்குதல் ஆட்டக் காரர் ஆடாம் ஃபர்ஹான் முகமது பைசால் மூலம் இரண்டாவது கோலை புகுத்தி வெற்றியை வலுப்படுத்திக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து ஆபத்தான முறையிலும் மூர்த்தனமாகவும் ஆடிய லவோஸ் விளையாட்டாளர்கள் மலேசிய கோல் முனையை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தியவண்ணம் இருந்தனர்.
இருந்த போதிலும் மலேசிய அணியின் வலுவான தற்காப்பு அரண் எதிரணியின் தொடர் தாக்குதல்களை எளிதாக முறியடித்தது.


Pengarang :