ECONOMYHEALTHNATIONAL

பிள்ளைகளுக்கு பேச்சு குறைபாடு உள்ளதா? இலவச மருத்துவப் பரிசோதனையில் பதிந்து கொள்வீர்

ஷா ஆலம், ஜூலை 19- பேச்சுத் திறனைப் பெறுவதில் பிரச்னை உள்ள பிள்ளைகளுக்கு முன்கூட்டியே இலவச பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக இலவச பரிசோதனைத் திட்டத்தில் பதிந்து கொள்ளும்படி அவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிலாங்கூரில் சிறப்பு தேவை உள்ள சிறார்களை அடையாளம் காண்பதற்கான திட்டத்திற்கு பதிவு செய்ய நாளை வரை  அவகாசம் உள்ளதாக அனிஸ் எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேக பிள்ளைகள் இலாகா கூறியது.

உங்கள் பிள்ளைகளுக்கு பேச்சு குறைபாடு உள்ளிட்ட தாமத வளர்ச்சிப் பிரச்னைகள் உள்ளதா? நிபுணர்கள் மூலம் முன்கூட்டியே பரிசோதனை மேற்கொண்டு பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய விரும்புகிறீர்களா? உடனே இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று அனிஸ் தலைவர் டேனியல் அல்-ரஷிட் ஹருண் கூறினார்.

இந்த பரிசோதனை திட்டமானது இதற்கு முன்னர் எந்த மருத்துவரிடமும் சோதனை கொள்ளாதவர்களுக்காக பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 20 ஆம் தேதிக்குள் பதிந்து கொள்ளுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://www.anisselangor.com/saringan  என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :